பதிவு செய்த நாள்
27
பிப்
2023
02:02
திருப்போரூர், : திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாழம்பூர் ஊராட்சி, கிருஷ்ணா நகரில், திரிசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், ஞான சக்தியாக சரஸ்வதி தேவியும், இச்சா சக்தியாக லட்சுமி தேவியும், கிரியா சக்தியாக தாய் மூகாம்பிகையும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பது தனிச் சிறப்பாகும். இக்கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாத பிரமோற்சவம் விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, நேற்று 10, 11, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு கல்வி யாகம் வழிபாடு நடந்தது. ஒரு மணி நேரம் நடந்த பூஜையில், 150 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.நிறைவில், அனைவருக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.