வைத்தீஸ்வரன் கோவிலில் ஜப்பானியர்கள் சிறப்பு ஹோமம் நடத்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2023 06:02
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் ஜப்பானியர்கள் சிறப்பு ஹோமம் நடத்தி வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. நவகிரக ஸ்தலங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமாரசுவாமி, சித்த மருத்துவத்தின் அதிபதியான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகள் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர், இங்கு அமைந்துள்ள தீர்த்தத்தில் புனித நீராடி சுவாமி அம்பாளை வழிபட்டு இங்கு வழங்கப்படும் பிரசாதமான திருச்சந்தூர்ண்டையை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு இன்று வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பாலகும்ப குரு மணிகள் தலைமையிலான40 ஜப்பானியர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டனர். இவர்கள் தமிழகம் முழுவது ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீகம் மற்றும் சித்தர் வழிபாடு ஆகியவற்றை அறிந்து உணர்ந்து அவற்றை பின்பற்றுவதுடன், சிவன், முருகன் மற்றும் நவகிரக ஸ்தலங்களில் சிறப்பு ஹோமங்கள் செய்து வழிபாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.