மேலுர்: சேக்கிபட்டி முத்தாளம்மன் கோயில் திருவிழா நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாளான நேற்று மந்தை அருகே பச்சை மண்ணால் செய்யப்பட்ட அம்மன் ஊரின் மையப்பகுதியில் உள்ள பச்சை குடிசைக்கு கொண்டு செல்லப்பட்டு மந்தை காட்டுக்கு கொண்டு சென்றனர். பிறகு கிராமத்தார்கள் சப்பரத்தில் அம்மனை அலங்கரித்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். மார்ச் 2 பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்தும் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவர். பிறகு கோயிலில் இருந்து அம்மன் பூஞ்சோலைக்கு கொண்டு செல்லப்படும். மார்ச் 3 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.இத் திருவிழாவில் அலங்கம்பட்டி, பட்டூர் உள்ளிட்ட 18 கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.