Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எல்லை காளியம்மன் கோவிலில் மாசி மக ... தமிழ் எழுத்துக்களுடன் கூடிய 16ம் நூற்றாண்டு நடுக்கல் சிற்பம் கண்டுபிடிப்பு தமிழ் எழுத்துக்களுடன் கூடிய 16ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி :பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி :பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

06 மார்
2023
01:03

தஞ்சாவூர், கும்பகோணத்தில், மாசிமக விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக, விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை போன்று, மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று, ஆண்டுதோறும் மாசிமக விழா கொண்டாடப்படுகிறது.மாசிமக விழாவினை முன்னிட்டு, கடந்த பிப்.25ம் தேதி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட ஆறு சிவாலயங்களிலும், 26ம் தேதி மூன்று பெருமாள் கோவில்களிலும், கொடியேற்றத்துடன் பத்துநாள் உற்சவம் தொடர்ந்து நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி இன்று 12.30 மணிக்கு பெற்றது. இதையொட்டி, விழாவில் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் இருந்து காலை 10 மணிக்கு சுவாமிகள் புறப்பட்டு, மகாமக குளத்தைச் சுற்றி வலம் வந்து குளக் கரையில் தீர்த்தவாரிக்காக எழுந்தருளினர். காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமி– அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன், ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரையில் எழுந்தருளினர். பின்னர், அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், பால், விபூதி உள்ளிட்ட மங்கள பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதை, தொடர்ந்து நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

சக்கரபாணி கோவில் தேரோட்டம்: இதை போல, வைணவ தலங்களில், கடந்த  பிப்.26ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இன்று தீர்த்தவாரியை முன்னிட்டு, சக்கரபாணிசுவாமி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன்  அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். பின்னர் காலை 9:00 மணியளவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம்: சாரங்கபாணி சுவாமி கோவிலில் ஐந்து நாட்கள் கோவிலுக்குள்ளே உள்புறப்பாடு நடந்தது. இறுதி நாளான மாசி மகத்தன்று, கோயிலின் பின்புறமுள்ள பொற்றாமரை குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar