Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக ... மாசி மகம்: காரைக்கால், மண்டபத்தூர் சமுத்திரக்கடலில் 7சுவாமிகள் தீர்த்தவாரி மாசி மகம்: காரைக்கால், மண்டபத்தூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ் எழுத்துக்களுடன் கூடிய 16ம் நூற்றாண்டு நடுக்கல் சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
தமிழ் எழுத்துக்களுடன் கூடிய 16ம் நூற்றாண்டு நடுக்கல் சிற்பம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

06 மார்
2023
01:03

திருமங்கலம்: திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தில் விவசாய நிலத்தில் 500 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துக்களுடன் கூடிய நடு கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரடிக்கல் கிராமத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் சுந்தர் தகவலில் சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லூரி வரலாற்று துறை கௌரவ விரிவுரையாளர் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் பேராசிரியர் முனீஸ்வரர் தலைமையில், பேராசிரியர்கள் லட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன், ஆய்வாளர் ஆனந்த குமரன் ஆகியோர் கரடிக்கல் பகுதியில் கள ஆய்வு செய்தனர். அப்போது பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துக்களுடன் கூடிய நடுக்கல் வீரன் சிற்பம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் கூறும்போது : சங்க காலம் முதல் இன்று வரை தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை ஒரு முக்கிய பங்காக உள்ளது நடுவில் என்பது போரில் இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் வீரம் பேசும் நினைவுக்கல் ஆகும். பெருநிரை ( பெருந்திரள் வீரர்களை கொன்று) விளக்கி மாண்டு போன வீரனுக்காக எடுக்கப்படும் நினைவுக்கல்லாகும். கரடிகள் விவசாய நிலத்தில் கண்டறியப்பட்ட நடுகள் சிற்பம் 3 அடி உயரமும் இரண்டு அடி அகலமும் 12 சென்டிமீட்டர் தடிமணம் கொண்ட கருங்கல்லாலான தனி பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரனின் உருவம் தேய்ந்த நிலையில் இடது கையில் கேடயம் ஏந்தியவாறும், வலது கையில் நீண்ட வாளை பிடித்தவாறு அமைந்துள்ளது. வலது புறம் சரிந்த கொண்டையானது அள்ளி முடிக்கப்பட்டும், காதுகளில் காதணி, கழுத்தில் சரபளி சவடி, பதக்கம் போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்ன வீரம் எனப்படும் வீர சங்கிலியும் காணப்படுகிறது. சன்ன வீரம் என்பது போருக்குச் செல்லும் வீரர்கள் அணிவதாகும். வீரனின் இடுப்பு பகுதியில் சலங்கை மற்றும் பதக்கம் கொண்ட அணிகலன்களும் கை, கால்களிலும் வீர கழல் அணிந்து கொண்டு, முன்னங்கால்களை ஊன்றி போருக்கு செல்வது போன்ற நிலையில் காணப்படுகிறது. வீரன் வலதுபுறத்தில் உள்ள பெண் சிற்பத்தின் முகம் தேய்ந்த நிலையில் நீண்ட கால்களில் அணிகலன்கள் அணிந்து அலங்காரத்துடன் வலது கையை தொங்கவிட்டு இடது கை வீரனை பின்தொடர்ந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிற்பத்தின் மேல் பகுதியில் நீண்ட வடிவில் பெரிய எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. தேய்மானம் ஏற்பட்டு படிக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததால் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களின் உதவியுடன் படிக்கப்பட்டது. இதில் "பெற்றான்"என்ற வார்த்தை மட்டுமே முழுமையாக உள்ளது மற்ற எழுத்துக்கள் தேய்மானம் அடைந்து விட்டது. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டு இந்தப் பகுதியில் திறம்பட போரிட்டு இருந்த வீரனின் நினைவை பறைசாற்றுவதற்காக வைக்கப்பட்டதாக இருக்கலாம். தற்போது இந்த பகுதி மக்கள் இந்த கல்வெட்டை வேட்டைக்காரன் சுவாமி என வழிபட்டு வருகின்றனர் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar