காளஹஸ்தியில் பக்த கண்ணப்பர் ஐக்கிய நாள் விழா : சிறப்பு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2023 06:03
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் பக்த கண்ணப்பர் பகவானில் ஐக்கிய மாகிய நாள் என்பதால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசுலு கலந்து கொண்டார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அருகில் உள்ள கைலாசகிரி மலையில் வீற்றிருக்கும் பக்த கண்ணப்ப கோயிலில் மூலவருக்கு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு பங்கேற்றார். மாசி மாத பௌர்ணமி அன்று திண்ணன் என்கிற பக்த கண்ணப்பருக்கு கைலாசநாதர் பக்திக்கு மெச்சி கண்ணப்பருக்கு காட்சி அளித்ததோடு தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்ட நாள் என்று ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.( திங்கள்கிழமை - செவ்வாய்க்கிழமை) மாசி மாதப் பௌர்ணமி என்பதால் ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் கைலாசகிரி மலையில் உள்ள பக்தகண்ணப்பர் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இன்று மாலை கோயில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் தலைமையில் கலசங்கள் நிறுவப்பட்டு, பக்தகண்ணப்ப மூலவருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,தீப தூப தீபம் ஏற்றப்பட்டு பூர்ண ஆரத்தி செய்யப்பட்டது. இந்த பூஜை வழிபாடுகளில் கோயில் நிர்வாகிகள், வேத பண்டிதர்கள், கோயில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.