ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தின விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2023 04:03
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 13.3.2005 ல் திருப்பணிகள் செய்யப்பட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் தலைமை தந்தரி கண்டரு ராஜிவருவால் புதியதாக கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் 2017ல் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. 18வது ஆண்டு பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு வல்லபை ஐயப்பன் கோவில் முன்பு அதிகாலை 5 மணியளவில் கணபதி ஹோமம் நடந்தது.மூலவர் வல்லபை ஐயப்பனுக்கு காலை 10:00 மணியளவில் பால், தயிர், பன்னீர், மஞ்சள் பொடி, இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அஷ்டாபிஷேகம் நடந்தது. பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் சரணகோஷம் முழங்கினர். கலசத்தில் இருந்து புனித நீர் தெளிக்கப்பட்டது. பஜனை, அர்ச்சனை, நாமாவளி உள்ளிட்டவைகள் பாடப்பட்டது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.