பதிவு செய்த நாள்
13
மார்
2023
04:03
அவிநாசி: அவிநாசி ஒன்றியம்,நடுவச்சேரி ஊராட்சிக்குட்பட்ட வடுகபாளையத்தில் எழுந்தருளியுள்ள கதிர்ராய பெருமாள் கோவிலில் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அவிநாசி அடுத்த நடுவச்சேரி ஊராட்சிக்குட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ கதிர்ராய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக,நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நடுவச்சேரி கோமளவள்ளி உடனமர் ஸ்ரீ கோட்டீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முதல் கால யாக வேள்வி பூஜையில்,மஹா ஸங்கல்பம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று இரண்டாம் கால யாக பூஜையில் திருவாராதானம், வேத பாராயணம், மூல மந்திர ஹோமம், கடம் புறப்படுதல் ஆகியவை நடைபெற்றது. திருமலை தேவஸ்தான குழுவின் சுதர்சன நாராயண ஐயங்கார்,திருமுருகன் பூண்டி ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில் ராதாகிருஷ்ண ஐயங்கார்,நந்தகோபால் அய்யங்கார் தலைமையில், மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தசதானம், மகாதீபாரதனை நடைபெற்றது. மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.