காளஹஸ்தி பிரசன்ன வரதராஜ சுவாமி கோயில் புனரமைப்பு பணி: மூலவர் சிலையின் அடியில் 37 தங்கச் தகடுகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2023 11:03
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவன் கோயில் துணை கோயிலான ஸ்ரீ பிரசன்ன வரதராஜ சுவாமி கோயிலை இடித்து விட்டு புதிதாக கோயில் கட்டும் பணி நடக்க உள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மூலவரை அகற்றும் பணியை பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிலையில் மூலவரை அகற்றும் சமயத்தில் ( பான மட்டத்தில்) மூலவர் சிலையின் அடிப்பகுதியில் (தரை மட்டத்தில்) 37 தங்கச் தகடுகளும் இரண்டு தங்க காசுகளும் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் தேவஸ்தான தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு சிவன் கோயில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிரசன்ன வரதராஜ ஸ்வாமி கோவிலை புனரமைப்புக்கான பூமி பூஜை இம்மாதம் 23ம் தேதி நடைபெறும் என அஞ்சூரு தாரக சீனிவாசுலு தெரிவித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள பழமையான விஷ்ணு கோயிலான ஸ்ரீபிரசன்ன வரதராஜ சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மூலவர் சிலை அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூலமூர்த்தியை அகற்றிய பிறகு மூலமூர்த்தியின் நீர் மட்டத்திலிருந்து கவனமாக பிரிக்கப்பட்டது. பனமட்டத்துக்குள்(நீர் மட்டம்) ஒன்றரை அடி ஆழத்தில் மூலமூர்த்தி வீற்றிருந்தார். இந்த பழமையான சிலையின் கீழ், அஷ்டமூலக பஞ்ச பீஜாக்ஷரங்கள் பொறிக்கப்பட்ட 37 தங்கப் தகடுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இரண்டு லட்சுமி காசுகளும் இருந்தன. நவரத்தினங்களும் கிடைத்தது. ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு தலைமையில், வருவாய், காவல் துறையினர் முன்னிலையில், தேவஸ்தான அதிகாரிகள் இவற்றை தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சீனிவாசனுக்கு கூறுகையில், உள்ளூர் மதிப்பீட்டாளர் மூலம் தங்கம் மற்றும் நவரத்தினம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அஷ்டமுலக பஞ்ச பூதங்கள், நவதானியங்கள், நவரத்தினங்கள் ஆகியவை பொதுவாக விஷ்ணு சிலைக்கு அடியில் வைத்து வழக்கம் என்றார். மேலும் அஞ்சூரு. தாரக சீனிவாசலு கூறியதாவது: வரும் 23ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி முன்னிலையில் வரதராஜ சுவாமி கோவில் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடக்கிறது என்றார்.