கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நாளை வண்டியோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2023 11:03
கொல்லங்கோடு: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் பங்குனி பரணி தூக்க திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் நாளான இன்று (23ம் தேதி ) காலை 7.30 மணிக்கு தூக்கக்காரர்களின் உருள் நமஸ்காரம், 8 மணிக்கு சமய சொற்பொழிவு, 10 மணிக்கு புல்லாங்குழல் இசை , 12 மணிக்கு பக்தி கானாஞ்சலி நடக்கிறது. 9ம் நாள் நாளை காலை 5.30 மணிக்கு தூக்கக்காரர்கள் முதன்மை பூசாரியுடன் வள்ளவிளை கடலில் நீராடி, பஞ்சகவ்ய முழுக்கல் மற்றும் கடல் பூஜை செய்த பின் கோவில் வந்து நமஸ்காரம் செய்வர் . 8.30 மணிக்கு சமய சொற்பொழிவு, 10 மணிக்கு கவிஞர்கள் மாநாடு, மாலை 6 மணிக்கு வண்டியோட்டம் நடக்கிறது. இதில், தூக்கரதம் குழந்தைகள் இல்லாமல் ஒரு முறை கோவிலை வலம் வரும் . தூக்கரதத்தின் இந்த சோதனை ஓட்டத்தின் போது ரதத்தை பராமரிக்கும் தச்சர் மட்டுமே ரதத்தில் தொங்குவார். தூக்கக்காரர்கள் ரதம் இழுப்பர். அம்மனின் பிறந்த நாளான பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று (25ம் தேதி) குழந்தைகளின் தூக்கநேர்ச்சை நடக்கிறது. இந்த ஆண்டு 1,352 குழந்தைகளுக்கு தூக்கநேர்ச்சைக்காக பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளது.