பதிவு செய்த நாள்
23
மார்
2023
04:03
நகரி:சித்துார் மாவட்டம், நகரி டவுனில் அமைந்துள்ளது கரியமாணிக்க பெருமாள் கோவில். நேற்று,சோபா கிருது தெலுங்கு வருடப் பிறப்வையொட்டி, மூலவருக்கு, அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து, காலை 6:00 மணி முதல், காலை 7:00 மணி வரை கோவில் குருக்கள் பிரசாத்வர்மா, உலக நன்மைக்காகவும், நம் நாட்டு மக்கள் நன்மைக்காகவும் பஞ்சாங்கம் வாசித்தார்.
பின் புதிய தெலுங்கு வருட பிறப்பில் உள்ள நன்மை, தீமைகள் குறித்து அங்கு கூடியிருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மத்தியில் பஞ்சாங்கம் பார்த்து விளக்கி கூறினார். தெலுங்கு வருடப்பிறப்பை ஒட்டி இக்கோவிலுக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை மற்றும் சித்துார் மாவட்டம், நகரி, புத்துார் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து சென்றனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
* திருத்தணி அடுத்த, பொன்பாடி, கொல்லகுப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில், நெமிலி கிராமத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் ஆகிய கோவில்களில் தெலுங்கு வருடப் பிறப்வையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
* திருத்தணி கெங்குசாமி பள்ளியில், தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி, கம்மவார் சங்கத்தின் சார்பில் சிறப்பு ஹோமம்மற்றும் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.
* ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் மூலவர் வால்கிமீஸ்வரர், அன்னை மரகதாம்பிகை மற்றும் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
* ஊத்துக்கோட்டை அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.