பதிவு செய்த நாள்
28
மார்
2023
09:03
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான நீலகண்டேஸ்வர சுவாமி, பக்த கண்ணப்பர் கோயில் மற்றும், அகஸ்தீஸ்வரர் கோவில்களில் மகா மண்டலாபிஷேக பூஜை நடந்தன.
இது குறித்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு கூறியதாவது: சிவன் கோயில் துணை ரம் கோவில்களுக்கு கடந்த ஆண்டு களில் இருந்த சிறப்பும் பெருமைகளையும் சேர்ப்பதே அறங்காவலர் குழுவின் நோக்கம் என்றார். ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயில்களான ஸ்ரீஅகிலண்டேஸ்வரி சமேத ஸ்ரீநீலகண்டேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ பக்த கண்ணப்ப கோயில் மற்றும் பெத்தகன்னலி கிராமத்தில் வீற்றிருக்கும் அகஸ்தீஸ்வரர் கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று 40 நாட்கள் நிறைவடைந்ததை யொட்டி மகா மண்டல அபிஷேகங்களை சாஸ்திர பூர்வமாக நடத்தினர்.இதே போல் பக்தகண்ணப்பர் கோயிலில் சிவன் கோயில் தலைமை அர்ச்சகர்கள் தலைமையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு மண்டல அபிஷேக பூஜையில் ஈடுபட்டார். மேலும் கண்ணப்பருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப பிரசாதங்களை வழங்கி மங்களஹாரத்திகளை எடுத்தனர். ஸ்ரீஅக்கலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ நீலகண்டேஸ்வர ஸ்வாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப் பட்டு சிறப்பு அலங்காரம் செய்ததோடு தீப தூப நெய்வேத்தியங்கள் வழங்கி ஆரத்தி எடுத்தனர்.இது குறித்து அஞ்சூரு.சீனிவாசுலு பேசுகையில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயில்களுக்குப் பெருமை சேர்க்கும் நோக்கில், 20, 30 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அனைத்து துணை கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மூலவர்களின் மகிமையை மீட்டெடுக்கும் வகையில் சிறப்பாக தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அபிஷேக குருக்கள் நிரஞ்சன் குருக்கள், கோயில் அர்ச்சகர்கள் சுரேஷ், அப்பாஜி சர்மா, மோகன் சர்மா,பிரசாத் சாமி மற்றும் கோவிந்தசாமி சர்மா உட்பட தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.