திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை பூஜை: சுவாமிகளுக்கு புனித நீர் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 06:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தினம் இரண்டு வேளை யாகசாலை பூஜை நடக்கிறது. கோயில் விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு வெள்ளி குடங்கள், எட்டு பரிவார தெய்வங்களுக்கு பித்தளை செம்பு களில் புனித நீர் நிரப்பி வைத்து, விநாயகர், சண்டிகேஸ்வரர், அஸ்தரதேவர், சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளனர். தினம் காலை 10:00 மணி, மாலை 5:30 மணிக்கு சிவாச்சாரியார்களால் யாக பூஜை நடத்தப்படுகிறது. ஏப். 10 காலையில் யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு சுவாமிகளுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்படும்.