ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு பங்குனி திருமஞ்சனம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரம் அன்று, ராமானுஜருக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு ஈரவாடை தீர்த்தம் வழங்கப்படும். இந்த வகையில், நேற்று பங்குனி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, ராமானுஜருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.