பதிவு செய்த நாள்
30
மார்
2023
01:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா, கடந்த 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும், காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.ஐந்தாம் நாள் உற்சவமான இன்று காலை, வெள்ளி அதிகார நந்தி சேவை உற்வமும், இரவு கைலாசபீட ராவண உற்வசமும் நடக்கிறது. இதையொட்டி, இன்று, காலை 8:00 மணிக்கு காமராஜர் வீதியில் உள்ள பெரிய காஞ்சிபுரம் தானிய வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் இருந்து அபிஷேக பொருட்கள் மேளதாள வாத்தியம் ஒலிக்க, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வரிசை புறப்பாடு நடக்கிறது. உற்சவத்தையொட்டி ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில், தனி அறையில், 10 தலைகளுடன் கொண்ட, கைலாசபீட வெள்ளி வாகனம் புதுப்பொலிவுடன் வீதியுலாவிற்கு செல்லும் கையில், பாலிஷ் செய்யும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. இதில், நான்கு பொற்கொல்லர்கள், கைலாசபீட ராவண வெள்ளி வாகனத்தை பாலீஷ் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.