பதிவு செய்த நாள்
30
மார்
2023
01:03
காஞ்சிபுரம்: வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனீஸ்வர பகவான் நேற்று, மதியம் 1:06 மணிக்கு அவிட்ட நட்சத்திரம் இரண்டாம் பாதம், மகர ராசியில் இருந்து, அவிட்ட நட்சத்திரம் மூன்றாம் பாதம் கும்ப ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி, காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை, உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் நேற்று சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. காலை 6:30 மணிக்கு, நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு கேது, தேவ குரு, வள்ளி தேவ சமேத சிவசுப்பிரமணியர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9:05 மணிக்கு சனி தோஷ நிவர்த்தி அடைய வேண்டி கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், 27 நட்சத்திர ஹோமம் ஆகிய பரிகார சாந்தி பூஜைகள் நடந்தன. மதியம் 1:06 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு விசேஷ கலச அபிஷேகம், அலங்காரம் மஹா தீபாராதனை நடந்தது.