நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2023 05:03
நயினார்கோவில்: பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயிலில் பூமிதி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா ராணி சேதுபதி பிரம்மகிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார் நிர்வாகத்தின் கீழ் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மார்ச் 30 இரவு அனுக்கை, காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் பூ மிதி திருவிழா துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் அபிஷேக ஆராதனைகளும், சக்தி கரகம், பாரத கதை ஆரம்பமாகி ஏப்., 8 வரை விழா நடக்கிறது. ஏப்., 2 பீம வேஷம், ஏப்., 4 சக்கர வாரிக்கோட்டை வைபவம், மறுநாள் அர்ஜுனன் தபசு நிலை நடக்க உள்ளது. ஏப்., 7 பக்தர்கள் மாவிளக்கு பிரார்த்தனை வைத்தல் மற்றும் இரவு பூக்குழி வைபவம் நடக்க உள்ளது. தொடர்ந்து ஏப்., 8 பால்குட விழாவும், இரவு சுவாமி புறப்பாடு மற்றும் மஞ்சள் நீராட்டு நடக்கிறது.