கோவை: மேட்டுப்பாளையம் ரோடு ஸ்ரீராமர் பஜனை கோவில் 53-ம் ஆண்டு ஸ்ரீராமநவமி விழா 29ம் தேதி முதல் நடந்துவருகிறது. விழாவில் சீதா-ராமர் கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது. இதில் மூலவர், மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.