மானாமதுரை: தெக்கூர் கைலாசநாதர், கோமதி அம்மாள் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களானதை தொடர்ந்து நேற்று வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 கால யாகசாலை பூஜை நடை பெற்ற பின்னர் 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தெக்கூர் மற்றும் பெரியகோட்டை சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.