பதிவு செய்த நாள்
03
ஏப்
2023
05:04
அவிநாசி: சேவூர் சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழாவில்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பொங்கல் விழா விமர்சையாக நடைபெற்றது.
சேவூர் சக்தி மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறும். அதுபோல் இந்தாண்டும் பங்குனி திருவிழா பூச்சாட்டுடன் கடந்த மார்ச் 26 ம் தேதி, கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி காலை, இரவு நேரங்களில், அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், அதை தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபாராதனைகளும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக,அம்மை அழைத்தலில், சேவூரில் உள்ள ராஜவிதி, கோபி மெயின் ரோடு, வடக்கு வீதி. ஐஸ்கடைவீதி, தெற்கு சேவூர், மற்றும் ராக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100ம் மேற்பட்டோர் மாவிளக்கு எடுத்து வந்து சக்தி மாரியம்மனை வழிபட்டனர். இதையடுத்து, பூவோடு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கம்பம் களைதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நாளை (செவ்வாய்) மஞ்சள் நிராடுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் ஆகியவை விழா கமிட்டியினர் சார்பில் வழங்கப்பட்டது.