வில்லுடையான்பட்டு முருகன் கோவிலில் அரோகரா கோஷத்துடன் குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2023 09:04
கடலூர் : நெய்வேலி வில்லுடையான்பட்டு முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வில்லுடையான்பட்டு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடைபெற்று வந்தது. நாளை பங்குனி உத்திர விழாவையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், ஆகாய விமானங்களில் அலகுகளுடன் தொங்கிய படியும், பெரிய காவடிகளுடன் முதுகில் அலகுடன் தேர் கட்டி இழுத்து அரோகரா கோஷத்துடன் முக்கிய வீதிகள் வழியாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் மற்றும் காவடி சுமந்தனர்.