சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2023 11:04
பெரம்பலுார், சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு, மதுர காளியம்மனுக்கு நன்னீராட்டு நடந்தது. முளையிடல் திருகாப்பு அணிவிக்கப்பட்டது. குடங்கள் தெய்வமாக்கப்பட்டது. இறை சக்திகள் கும்பத்தில் இறக்கப்பட்டது. வேள்வி சாலை அமைத்து வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து யாக சாலையில் குண்டத்தில் யாகம் வளர்க்கப்பட்டு, முதல் கால யாக சாலை பூஜை தொடங்கப்பட்டது. இன்று காலை 6ம் கால யாக சாலை பூஜை உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து காலை 9:45 மணிக்கு மேல் 10 :15 மணிக்குள் விமானம் ராஜகோபத்திற்கு புனித நீர் ஊற்றியும், மதுர காளியம்மன் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றியும் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.