கடலுார் : கடலுார் துறைமுகம் காமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம் நடந்தது.
கடலுார் துறைமுகம் காமாட்சி அம்மன் கோவிலில் 39ம் ஆண்டு பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி, காலை 7:00 மணிக்கு அபிஷேகம், 10:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. மாலை 6:00 மணியளவில் உற்சவர் காமாட்சி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் இளைஞர்கள் நற்பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.