பதிவு செய்த நாள்
15
ஏப்
2023
11:04
பெரம்பூர், நாட்டின் ஒவ்வொரு கிராமம், நகரத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் மகிமையை பரப்ப, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் எனும், இஸ்கான் அமைப்பை, ஸ்ரீல பிரபு பாதா துவக்கினார். அதன் காரணமாக, இந்த இயக்கத்தின் சார்பில், ஆண்டு தோறும் ஜகன்னாத் ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
அதே போன்று, வடசென்னை இஸ்கான் சார்பில், கவுர நித்தாய் ரத யாத்திரை விழா நேற்று மாலை நடந்தது. இதை, ஓசூர் இஸ்கான் கோவில் தலைவர் ஸ்ரீனிவாஸ் ஷியாம் தாஸ் துவக்கி வைத்தார். இந்த யாத்திரை, பெரம்பூர் பாரதி சாலையில் துவங்கி, பேப்பர் மில்ஸ் சாலை வழியாக, கொளத்துார் ரெட்டேரி சந்திப்பு, லட்சுமிபுரத்திற்கு சென்றது. வழியெங்கும், பெண்கள் ரங்கோலி கோலமிட்டு வரவேற்றனர். மேலும் பலர், பாடல் பாடியும், நடனமாடியும் மகிழ்ந்தனர். 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் இழுத்து சென்ற தேர், லட்சுமிபுரம் பத்மஸ்ரீ ஷேச மஹாலை, மாலை 6:30 மணிக்கு அடைந்தது. அங்கு, ரத யாத்திரைக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு ஆன்மிக சொற்பொழிவும், ஸ்ரீல பிரபு பாதா தியேட்டர்சின் அஜாமிளன் நாடகமும் நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதில், பெரம்பூர் கோவில் தலைவர் ஜெயகோபிநாத் தாஸ் பங்கேற்றார்.