ஆன்லைனில் திருமலை திருப்பதி டிக்கெட்டுகள் : 22ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2023 11:04
திருப்பதி: ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் ஆன்லைன் ஒதுக்கீடு, ஏப்ரல் 20ம்தேதியான இன்று காலை 10 மணி முதல் துவங்கியது. 22ம் தேதி காலை 10 மணி வரை பதிவுகள் திறந்திருக்கும்.
ஜூலை மாதத்திற்கான கல்யாணம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் ஆன்-லைன் ஒதுக்கீடு ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 11.30 மணி முதலும், ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் அதே நாளில் மதியம் 3 மணிக்கும் கிடைக்கும். ஜூலை மாதத்திற்கான அங்க பிரதக்ஷிணம் டோக்கன்கள் ஏப்ரல் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு முன்பதிவு செய்யக் கிடைக்கும், அதே நாளில் உடல் ஊனமுற்றோர்களுக்கான டிக்கெட் 3 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாரி கோயிலின் கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம், சஹஸ்ர தீபாலங்கார சேவைகளுக்கான ஆன்லைன் சேவை [மெய்நிகர் பங்கேற்பு] மற்றும் இணைக்கப்பட்ட தரிசன ஸ்லாட்டுகள் 2023 மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு முறையே ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். திருமலையில் தங்குவதற்கான ஆன்லைன் ஒதுக்கீடு ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கும், திருப்பதியில் ஏப்ரல் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படும். பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு தங்கள் தரிசனம் மற்றும் தங்குமிடத்தை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.