பதிவு செய்த நாள்
20
ஏப்
2023
04:04
மேட்டுப்பாளையம்: காட்டூரில் உள்ள, தவிட்டு மாரியம்மன் கோவில் திருவிழா, பூச்சாட்டுடன் துவங்கியது.
மேட்டுப்பாளையம் காட்டூர், ஜெகநாதன் லே அவுட்டில் தவிட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 43ம் ஆண்டு திருவிழா, நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. காலையில் கணபதி வேள்வி பூஜை நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வருகிற, 25-ம் தேதி அக்னி கம்பம் நடுதலும், 26ம் தேதியிலிருந்து, மே இரண்டாம் தேதி வரை அம்மன் சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளன. இரண்டாம் தேதி இரவு அம்மன் அழைப்பும், 3ம் தேதி காலையில் பொங்கல் வைத்தலும், மாலையில் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற உள்ளது. 4ம் தேதி மஞ்சள் நீராட்டும், மதியம் அன்னதானமும், 9ம் தேதி மறு பூஜை நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.