பதிவு செய்த நாள்
20
ஏப்
2023
06:04
சோழவந்தான்: சோழவந்தான் அருகே குருவித்துறையில் பாண்டிய நாட்டின் நவகிரக குருஸ்தலமாக விளங்கும் சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டர் தலைமையில் நடந்தது.
ஸ்ரீகுருபகவான் ஏப்.22ல் இரவு 11.24 மணிக்கு மேல் மீன ராசியில் இருந்து மேஷராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையடுத்து இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை குருப்பெயர்ச்சிக்கான பரிகார மஹா யாகபூஜையும், மஹாபூர்ணாஹீதி, திருமஞ்சன சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இப்பெயர்ச்சியின் போது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகியவை பரிகார ராசிகளாகும். இந்நிகழ்வில் அர்ச்சகர்கள் ராஜா பட்டர், கோபால் பட்டர், பாலாஜி பட்டர், நாராயண மூர்த்தி, செயல் அலுவலர் பாலமுருகன், தக்கார் இளங்கோவன், கணக்கர் நாகராஜ் உட்பட் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.