சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2023 04:04
நாகர்கோவில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9:00 மணிக்கு வட்டப்பள்ளி மடம் சிவபிரசாத் கொடிமர பூஜைகள் நடத்தினார். திலீப் நம்பூதிரி கொடியேற்றினார். 10:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து விழாவில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 29–ம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் காலை 7:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 30–ம் தேதி பத்தாம் நாள் விழாவில் இரவு 8:00 மணிக்கு சுவாமி– அம்பாள் தெப்பக்குளத்துக்கு எழுந்தருளியதும், தெப்பம் மூன்று முறை குளத்தில் சுற்றி வரும். நள்ளிரவு 12:00 மணிக்கு ஆராட்டு நடைபெற்று விழா நிறைவு பெறும்.