ராமேஸ்வரம் கோயிலில் ரூ.65.94 லட்சம் உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2023 04:04
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 16 நாள்களுக்கு பின் உண்டியல் காணிக்கை ரூ. 65.94 லட்சம் வருவாயாக கிடைத்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 16 நாட்களுக்கு பின் இன்று சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் கோயில் துணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் திறக்கப்பட்டு, காணிக்கைகளை கோயில் ஊழியர்கள் சேகரித்தனர். இதனை கோயில் கல்யாண மண்டபத்தில் எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் ரூ. 65 லட்சத்து 94 ஆயிரத்து 700 ரூபாயும், தங்கம் 59 கிராம், வெள்ளி 1 கிலோ 200 கிராம் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கையை கோயில் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, பஞ்சமூர்த்தி, முனியசாமி, கோயில் ஊழியர்கள் பலர் எண்ணினார்கள்.