Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் திருவிழாவில் திருவிளக்கு ... மஹாராஷ்டிரா ஷீரடி சாயிபாபா கோயில் மே1 முதல் காலவரையின்றி மூடப்படும் மஹாராஷ்டிரா ஷீரடி சாயிபாபா கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று.. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று.. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2023
08:04

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழாவின் 8ம் நாளான இன்று(ஏப்.,30) அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

இக்கோவில் சித்திரைத்திருவிழா ஏப்.,23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை திக்குவிஜயம்,மே 2ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்,மே 3 தேரோட்டம், மே 4 கள்ளழகர் எதிர்சேவை,மே 5ல் வைகையாற்றில்அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் காலை, மாலைமாசிவீதிகளில் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர்.முக்கிய நிகழ்வாக இன்று அம்மனுக்கு பட்டாபிேஷகம் இரவு 7:05 முதல் 7:29 மணிக்குள் அம்மன் சன்னதி ஆறு கால் பலி பீடத்தில் நடக்கிறது. அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டப்பட்டு, நவரத்தின கற்களாலான செங்கோல் வழங்கப்படும். அம்மனிடம் இருந்து தக்கார் கருமுத்து கண்ணனிடம் செங்கோல் வழங்கப்படும். அதை பெற்றுக்கொண்டு சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் வழியாக வந்து மீண்டும் அம்மனிடம் ஒப்படைக்கிறார். பின் மதுரையை ஆளும் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் அம்மன் வலம் வருகிறார்.

நாளை இரவு எட்டு திக்கிலும் தேவர்களை வென்று கடைசியாக சுவாமியுடன் போர் புரியும் நிகழ்ச்சியான திக்குவிஜயம் நடக்கிறது.மே 2 கோவிலின் வடக்காடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8:30 முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 3 தேரோட்டம் அன்று அதிகாலை 5:05 மணி முதல் 5:45 மணிக்குள் அம்மனும், சுவாமியும் எழுந்தருள தேர்கள் புறப்படுகின்றன.

மே 5ல் வைகையில் கள்ளழகர்: அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழாநாளை துவங்குகிறது. மே 3 இரவு 7:00 மணிக்கு கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை புறப்படுகிறார். மே 4 அதிகாலை மதுரை மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது. மே 5 வைகை ஆற்றில் கள்ளழகர் காலை 5:45 மணிக்கு மேல் 6-:12 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். மே 6- தேனுார் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார அலங்காரம் நடக்கிறது. மே 7 இரவு பூப்பல்லக்கு விழா நடக்கிறது.மே 8- காலை கள்ளழகர் அழகர் மலை நோக்கி புறப்பட்டு மே 9 காலை 10:32 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar