மஹாராஷ்டிரா ஷீரடி சாயிபாபா கோயில் மே1 முதல் காலவரையின்றி மூடப்படும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2023 08:04
மஹாராஷ்டிராவில் ஷீரடி சாயிபாபா கோயில் மிகவும் புகழ்பெற்ற புனிதஸ்தலமாகக் கருதப்படுகிறது. விடுமுறை நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாயிபாபாவை தரிசிக்க வருகின்றனர். இந்தக் கோயிலுக்கு தற்போது மகாராஷ்டிரா போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். ஆனால் இனி ஷீரடி சாயிபாபா கோயிலுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பை மத்தியத் தொழிற்பாதுகாப்பு படையினரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளது மாநில அரசு. மாநில அரசின் இந்த முடிவுக்குக் கோயில் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்தகளை கையாள்வது மற்றும் கோயில் பாதுகாப்பைக் கையாள மத்தியத் தொழிற்பாதுகாப்புப் படையினருக்குப் போதிய பயிற்சி இருக்காது. ஆகவே அதன் பாதுகாப்பை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது. ஆகையால் அரசின் முடிவை எதிர்த்து மே 1-ம் தேதியிலிருந்து காலவரையற்று சாயிபாபா கோயிலை மூடப்போவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.அரசு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண கோயில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.