பழநிகோயிலில் மூன்றாவது வின்சு இயந்திர பழுதால் நிறுத்தம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2012 10:09
பழநி: பழநி கோயில் மூன்றாவது வின்சு இயந்திரத்தில் உள்ள பல் சக்கர தேய்மானம் காரணமாக இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. பழநி மலைகோயிலுக்கு செல்ல மூன்று வின்சுகள், ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் கோலார் தங்க வயல் என்.ஐ.ஆர்.எம்., நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் மூன்று வின்சுகளின் இரும்பு கயிறு, இயந்திரம் உள்ளிட்டவைகளை அல்ட்ராசோனிக் சோதனை மேற்கொள்வார்கள். வின்சு நல்ல நிலையில் உள்ளது என சான்றிதழ் வழங்கிய பின்னரே இயக்கம் தொடரும்.
தேய்மானம்: இந்த ஆண்டு நடத்திய சோதனையில், மூன்றாவது மேல் வின்சு ஸ்டேஷனில் இயங்க கூடிய இயந்திரத்தில் உள்ள சிறிய பல் சக்கரத்தில்(பினியன் சாப்ட்) தேய்மானம் ஏற்பட்டுள்ளது. அதனை மாற்றி புதிய பல் சக்கரத்தை பொருத்தி இயக்கலாம் என சான்றிதழில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் மூனறாவது வின்சு இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற இரு வின்சுகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. அதிகாரி ஒருவர் கூறுகையில்,புதிய பல் சக்கரம் தயாரித்து பொருத்த இன்னும் 20 நாட்கள் ஆகும். அதன்பின் மூன்றாவது வின்சு இயக்கப்படும், என்றார்.