காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2023 05:05
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் அன்னதான திட்டத்திற்காக தனியார் நிதி நிறுவனப் பொது மேலாளர் ரத்னகுமார் மற்றும் குடும்பத்தினர் இணைந்து (ஐந்து லட்சத்து நூற்று பதினாறு ரூபாய்) 5,00,116/-ஐ கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக.சீனிவாசுலுவிடம் வழங்கினார். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் கோயில் அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்தனர்.கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி அம்மையார்களின் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.இதில் கோயில் தேவஸ்தான தலைமை அர்ச்சகர்கள் கருணா குருக்கள் கோயில் நிர்வாகிகள், தேவஸ்தான கண்காணிப்பாளர் நாகபூஷணம், கோயில் ஆய்வாளர் ஹரி யாதவ், ஏபிஆர்ஓ மணி, தாபேதார் தாமு, நன்கொடை கவுண்டர் பணியாளர்கள், தேவஸ்தான வேதப் பண்டிதர்கள் அர்த்தகிரி, சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.