பதிவு செய்த நாள்
01
மே
2023
05:05
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில், இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை பிரமோற்சவம், இம்மாதம் 24ம் தேதி, திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 3-வது நாளன்று, அதிகார நந்தி சேவையில், 63 நாயன்மார்கள் வீதி உலாவும் நடந்தது. 5-வது நாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடந்தது. விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு, 36 அடி உயரமுள்ள பெரிய தேரில், ஆட்சீஸ்வரர், இளங்கிளியம்மன் எழுந்தருளி அருள்பாலித்தனர். அதைத் தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தேர்த் திருவிழா துவங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்க, ஈஸ்வரன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, மேற்கு மாட வீதி, யாதவர் தெரு என, நான்கு மாட வீதிகளிலும் தேர் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானையும் அம்மனையும் தரிசனம் செய்தனர். விழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கும் விதமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், 108 அவசர ஊர்தி, தீயணைப்பு துறை, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர் செல்லும் மாடவீதி பகுதிகளில், மோர், பானகம், சுண்டல், குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வேதகிரீஸ்வரர் கோவிலில்: இன்று திருத்தேர் உற்சவம்திருக்கழுக்குன்றம், மே 1-திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் சித்திரை பெருவிழா, ஏப்ரல் 25 முதல் தொடர்ந்து நடைபெறுகிறது. விழாவின் ஏழாம் நாள் உற்சவமாக, பஞ்சமூர்த்தி சுவாமியர் திருத்தேரில் வீதியுலா செல்கின்றனர்.காலை 5:00 - 6:00 மணிக்கு, வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி, விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர், நிலையிலிருந்து தனித்தனி தேரில் புறப்பட்டு, வீதியுலா செல்கின்றனர்.இதையடுத்து, தேர்களை மூடிய தகடுகளை பிரித்து, துாசு அகற்றி, தேரின் சக்கரங்கள், ஹைட்ராலிக் அமைப்பு ஆகியவை பராமரிக்கப்பட்டன.