மதுரை: திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் பெற்றது.
திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு மீனாட்சியம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. பெருமாள், பிரியாவிடையுடன் மீனாட்சி சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.