பெரியகுளத்தில் கள்ளழகரை வரவேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2023 05:05
பெரியகுளம்: பெரியகுளத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் குதிரை வாகனத்தில், பச்சைபட்டு உடுத்தி எழுந்தருளினார்.
பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து கள்ளழகராக வராகநதிகரையோரம் மண்டகப்படியில் எழுந்தருளினார். பச்சை பட்டு உடுத்தி, கருப்பு பொட்டு வைத்து வடகரை அழகர்சாமிபுரத்தில் துவங்கிய மண்டகப்படி தென்கரை வரை 36 மண்டகப்படிதாரர்கள் பூஜையில் வந்து சென்றார். கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் எழுந்தருளிய கள்ளழகரை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.
அர்ச்சகர் பாபு கூறுகையில்: கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி, கருப்பு பொட்டு வைத்திருப்பது, அனைவருக்கும் சகலவிதமான ஐஸ்வர்யம் கிடைக்கும், விவசாயம் செழிக்கும் என்றார். கள்ளழகரை வரவேற்க பெரியகுளம் பகுதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகர் வேடம் அணிந்தவர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து ஆனந்தப்படுத்தினர். வழிநெடுகிலும் நீர்மோர் வழங்கி பக்தர்களை உற்சாகப்படுத்தினர்.