பதிவு செய்த நாள்
17
மே
2023
11:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நேற்று காலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாளான நேற்று காலை, வைகுண்ட பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சப்பரம் வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை ஹம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபை வாகனத்திலும், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. நாளை மூன்றாம் நாள், கருடசேவை உற்சவம் நடக்கிறது. தினசரி காலை, இரவு வெவ்வேறு வாகனங்களில், பெருமாள் எழுந்தருளி வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 24ம் தேதி காலை தீர்த்தவாரி நடக்கிறது. இரவு முகுந்த விமானம் உற்சவத்துடன், திருவிழா நிறைவு பெறுகிறது.