திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2023 11:05
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வரபவான் கோவில் பிரமோற்சவ விழாவை கொடியேற்றத்துடன் துவங்கியது.
காரைக்கால் மாவட்ட திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அனுக்கிரகமூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் பிரமோற்சவ விழா நேற்று கோடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமத்துடன் துவக்கியது.நேற்று தர்பாரண்யேஸ்வரர், அம்பாள் மற்றும் சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை ரிஷப கொடியேற்றமும்.பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது. பிரம்மோற்சவ விழாவையொட்டி தியாகராஜர் உன்மத்த நடனம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சி 5தேர்திருவிழா வரும் 30ம் தேதி.31ம் தேதி சனீஸ்வரபகவான் தங்ககாக வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.