அமாவாசை பிதுர் வழிபாட்டுக்குரிய நாள். ஆனால், நிறை அமாவாசை என்று பலரும் சுபநிகழ்ச்சி நடத்துகின்றனர். அவரவர் குடும்பப் பெரியவர்கள் அமாவாசையில் சுபநிகழ்ச்சி நடத்தியதாகவும் சொல்கின்றனர். அமாவாசை, பிரதமை ஆகிய இரு திதிகளும் முடிந்தபிறகு, வளர்பிறை துவிதியை முதல் சுபநிகழ்ச்சி நடத்துவதே நல்லது.