சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2023 10:05
சோழவந்தான்; சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த மார்.27ல் மூன்றுமாத கம்ப கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து மே.15ல் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. தொடர்ந்து நேற்று பூசாரி சண்முகவேல் தலைமையில் யாக வேள்வி நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்பு பூசாரி கொடியை மேளதாளம் முழங்க நான்கு ரத வீதியில் வலம் வந்து கோயில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார். இதையடுத்து கொடிக்கம்பத்திற்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட திரவ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, பூக்குழி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்த காப்பு கட்டினர். மண்டகபடிதாரர் மந்தையனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்தனர். இதில் காவல் ராசு அம்பலம் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் இளமதி, பணியாளர்கள் பூபதி, பெருமாள், வசந்த் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.