Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி கோயில் உண்டியல் காணிக்கை 18 கிலோ ... சின்னாளபட்டி கோயில் விழாவில் மார்பில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் சின்னாளபட்டி கோயில் விழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் இணை ஆணையர் நியமிக்காமல் இழுத்தடிப்பு
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் இணை ஆணையர் நியமிக்காமல் இழுத்தடிப்பு

பதிவு செய்த நாள்

23 மே
2023
05:05

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இணை ஆணையரை நியமிக்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது.

ராமேஸ்வரம் கோயிலுக்கு ஓராண்டில் 2 கோடிக்கு மேலான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தல், கோயில் பூஜைகள், அபிஷேகம், திருவிழாக்கள், கோயில் நிர்வாகத்தை பல ஆண்டுகளாக இணை ஆணையர், தக்கார் கண்காணித்தனர். 2022ல் இக்கோயிலுக்கு துணை ஆணையரை நியமித்து கோயில் நிர்வாக தரத்தை குறைத்தனர். மேலும் ஓராண்டாக தக்கார் நியமிக்காமல் தமிழக அரசு அலட்சியமாக உள்ளது. இதனால் கோயிலில் திட்ட பணிகள், பூஜை, வழிபாடு முறையை கண்காணிக்கவும், நிர்வாக சிக்கல் ஏற்படுகிறது. இச்சூழலில் கடந்த மார்ச்சில் இக்கோயிலுக்கு மீண்டும் இணை ஆணையர் தரத்திற்கு உயர்த்தி அரசு உத்தரவிட்டது. ஆனால் இதுநாள் வரை இணை ஆணையர் நியமிக்கவில்லை. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து வி.எச்.பி., தென் மண்டல அமைப்பாளர் ஆ.சரவணன் கூறுகையில் : ஹிந்து கோயில் வழிபாடு முறையை சீர்குலைக்கவே தமிழக அரசு இக்கோயிலின் நிர்வாக தரத்தை குறைத்து, ஓராண்டாக தக்கார் நியமிக்காமல் உள்ளது. காணிக்கை, தரிசனம் என பக்கரிடம் இருந்து பணம் பறிப்பதே நோக்கமாக உள்ளது. ஆனால் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தவோ, பூஜை, சமய சடங்குகளை பின்பற்றவோ அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. எனவே இணை ஆணையர், தக்காரை நியமிக்க கோரி ஒரு கோடி பக்தரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி கவர்னரிடம் மனு அளிக்க உள்ளோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
திருமலை; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா மே 06 முதல் 08 வரை ... மேலும்
 
temple news
தேனி;வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் விருப்பன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar