வடலூர்: வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய சமரச சுத்த சன்மாக்க சத்திய தருமசாலையின் 157ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 7 நாட்களாக அருட்பெரும் ஜோதி மகா மந்திர பாராயணம், திருவருட்பா முதற்றோதல் நடந்தது. நேற்று முன்தினம் சத்திய தருமசாலை மேடையில் இரவு 6 மணி முதல் 12 மணி வரை திருஅருட்பா சிறப்பு இன்னிசை நாடகம், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 5மணிக்கு சத்திய தருமசாலையில் அகவல் பாராயணம் நடந்தது. இதனை தொடர்ந்து 7.30 மணியளவில் சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமாக சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சத்திய தருமசாலை மேடையில் வில்லுப்பட்டு, சொற்பொழிவுகள் நடந்தது. இரவு 7 மணி முதல் 10 மணி வரை திருஅருட்பா இன்னிசை நடந்தது. இதற்கான ஏற்படுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் மற்றும் வடலூர் வள்ளலார் தெய்வநிலைய நிர்வாக அதிகாரி ராஜாசரவணகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.