பதிவு செய்த நாள்
28
மே
2023
10:05
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள உப்பு பள்ளத்தில், பண்ண மாகாளியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் விழா கடந்த, 15ம் தேதி கிராம சாந்தி மற்றும், 16ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. 23ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நாளை இரவு, 9:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து, பால்குடம், தீர்க்க குடம், பூவோடு, கரகம் ஆகியவை பம்பை, உடுக்கை, ஜமாப் இசை முழங்க அம்மன் அழைப்பு நடைபெற உள்ளது. 31ம் தேதி அன்னதானம், மகா தீபாரதனை, அபிஷேக அலங்கார பூஜை, அழகு குத்துதல், மாவிளக்கு எடுத்தலும் ஆகியவை நடைபெற உள்ளது. மே, 1ம் தேதி மஞ்சள் நீராட்டும், இரண்டாம் தேதி மறு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.