புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவிலில் காலை தேரோட்டம் நடந்தது.
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 27ம் தேதி பாரிவேட்டை, 29ம் தேதி 63 நாயன்மார் வீதியுலா, நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. கவர்னர் தமிழிசை தேர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர். தேரோட்டத்தில் முதல் அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.14ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.