உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டில், கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், இந்தாண்டுக்கான கூழ்வார்த்தல் விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை, பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, குடம் அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. குடம் ஊர்வலத்துடன் அப்பகுதி பெண்கள், கூழ் சுமந்தபடி கோவிலை வந்தடைந்தனர். மதியம் 2:00 மணிக்கு, பம்பை உடுக்கை அடித்து அம்மனை வர்ணித்து பாடல்கள் பாடியதை தொடர்ந்து கூழ் வார்த்தல் விழா நிறைவு பெற்றது.