ஜம்முவில் ஜம்மென்று நடக்கவிருக்கும் திருப்பதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2023 10:06
ஜம்மு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் உள்ள சீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்காக ஆங்காங்கே இடம் வாங்கி திருமலை திருப்பதியில் இருப்பது போலவே கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஜம்முவில் திருமலை திருப்பதி கோவில் 30 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் வரும் 8ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் வரும் 3ம் தேதி துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.