பழநி: பழநி, சாது சண்முக அடிகளார், இந்திய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொண்டு பழநி திரும்பினார் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பழநி, சாது சண்முக அடிகளார், டெல்லியில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதில் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு செங்கோல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். அதன்பின் நேற்று மாலை பழநி ஆசிரமத்திற்கு திரும்பினார். மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர் கிரி வீதியில் நகரின் முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
அதன்பின் சாது சண்முக அடிகளார் மடத்தில் சாது சண்முக அடிகளார் பேசுகையில்,"தற்போதுள்ள நாடாளுமன்றம் 90 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. நிர்வாக அலுவலக செலவீனங்கள் ஆண்டு தோறும் ரூ.1500 கோடி ஏற்படுகிறது. தற்போது ரூ.980 கோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிர்வாக அலுவலர்கள் அனைத்தும் செயல்பட உள்ளது. இதனால் ஆண்டுதோறும் மிகப்பெரிய செலவு குறையும். சுதந்திரத்தை பரிமாறிக் கொள்ள ராஜாஜி அவர்கள் பழமையான திருவாடுதுறை ஆதீனத்தின் மூலம் புதிய செங்கோல் செய்யப்பட்டு நேருவிடம் கொடுக்கப்பட்டது. புதிய பாராளுமன்றத்தில் தற்போதைய பிரதமர் மோடி பாராளுமன்றத்தின் உயரிய இடத்தில் செங்கோலை வைத்துள்ளார். தமிழகத்திற்கு பெருமையை ஏற்படுத்துகிறது. சாது சண்முக அடிகளார், புலிப்பாணி பாத்திர சுவாமிகள் என இரண்டு சன்னியாசிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இது பழநிக்கு பெருமையானது. பாராளுமன்றத்தில் பிரதமர் நடந்து கொண்டது இனி அவருடைய ஆட்சியை தொடர்ந்து நாட்டில் நிலவும் என்பதை உணர்த்துகிறது. பிரதமரையும் புறம்தள்ளியவர்கள் வியக்கும் அளவுக்கு செயல்பட்டு வருகிறார். தமிழை மிகப் பழமையான மொழி என பறைசாற்றுகிறார். தமிழை பாதுகாக்க வேண்டும்." என்றார்.