திருப்புத்தூர் வைகாசி விசாகத் தேரோட்டம்; உற்சாகத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2023 04:06
திருப்புத்தூர்:திருப்புத்தூர் திருத்தளிநாதர் சமேத சிவகாம சுந்தரி அம்பாள் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த தேரோட்டத்தில் பக்தர்கள் உற்சாகத்துடன் வடம் பிடித்தனர்.
குன்றக்குடி ஆதீனத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா மே 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவு வாகனங்களில் சுவாமி,அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று 9ம் திருநாளை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கோயிலிலிருந்து சுவாமி புறப்பாடாகி 3 தேர்களில் சுவாமி, அம்பாள், விநாயகர் ஆகியோர் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தேர்களில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4:52மணிக்கு திருப்புத்தூர், புதுப்பட்டி, தம்பிபட்டி, தென்மாப்பட்டு கிராமத்தினர் வருகைக்குப் பின் குன்றக்குடி தேவஸ்தான ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகள் தலைமையில் வடம் பிடித்தனர். முதலில் விநாயகர் தேர் புறப்பட, தொடர்ந்து சுவாமி, அம்மன் தேர்கள் தேரோடும் வீதியில் வலம் வந்தன. திரளாக பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்தனர். இன்று காலை 9:00 மணிக்கு திருத்தளித் தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்குதலும், இரவு 8:00 மணிக்கு தெப்பமும் நடைபெறுவதும் விழா நிறைவடைகிறது.