பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி திருவிழா, திருதேரோட்டம் நடைபெற்றது.
பழநி முருகன் கோயில் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா மே 27ல் கொடியேற்றத்துடன் துவங்கி, ஜூன், 5 வரை நடைபெற்று வருகிறது. தினமும் தங்கப் பல்லாக்கு, தங்க மயில், காமதேனு ஆட்டுக்கடா,வெள்ளி யானை, தங்கக்குதிரை என வாகன புறப்பாடு நடைபெறுகிறது. ஜூன்,1 ல் திருவிழாவில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தில் மாலை 4:39 மணிக்கு வடம் பிடித்தல் நடைபெற்றது. பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டனர். நான்கு ரதவீதிகளிலும் தேர் இழுத்தனர். கோயில் யானை கஸ்தூரி தேர் பின்னால் வந்தது. மாலை 5:42 மணிக்கு நிலைக்கு வந்தது. அதன் பின் தேர்க்கால் பார்த்தல் நடந்தது. தேரோட்டத்தில் கோயில் இணை ஆணையர் பிரகாஷ், டி.எஸ்.பி., சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜூன்,5 இரவு கொடியிறக்குதலுடன் வைகாசி திருவிழா உற்சவம் நிறைவு பெறுகிறது.