வைகாசி பஞ்சமி, திருவோண விரதம்; வாராகி வழிபாடு வாழ்வை வளமாக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2023 10:06
அமாவாசை, பெளர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது திதி பஞ்சமியாகும். இது நாகதேவரின் நாளாகும். இந்த நாளில் வாகனம் வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், விஷத்தை முரித்தல், மருத்துவம் செய்தல், அறுவை சிகிச்சை செய்தல், மற்றும் எல்லாவித சுபகாரியங்களையும் செய்யலாம். சீமந்தம் செய்வதற்கு சிறந்த திதி பஞ்சமி திதியாகும். இந்த நாளில் மருந்துகள் சாப்பிட நோய்கள் விரைவில் மறையும். பஞ்சமி திதியில் வாராகி தேவியை வழிபட்டு வரலாம். பஞ்சமி திதியன்று பஞ்சமி தீப வழிபாடு செய்யலாம். பஞ்சமி சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். பஞ்சமி திதி வரும் தினத்தன்று குத்துவிளக்கில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி வழிபட வேண்டும். நம்முடைய வேண்டுல்தல்களை மனதில் நினைத்து “ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்கண்டு மற்றும் பழம் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். திருவோண நட்சத்திர நாளான இன்று பெருமாளை வழிபட இனிமையான வாழ்க்கை அமையும்.